அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகளுக்கு சவுதி அரசாங்கம் பல புதிய திட்டங்கள் மூலம் பல்வேறு வசதிகளை வருடா வருடம் அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் ஹாஜிகளுக்காக ஹரமைன் தொடர் வண்டியை அறிமுகப்படுத்துகிறது.
ஹரமைன் தொடர்வண்டி சவுதி ரியால் 6.5 பில்லியன் செலவில், மணிக்கு 72 ஆயிரம் பேர் பயணம் செய்யும் வசதியுடன் உறுவாகிறது. இது அரபா, மினா மற்றும் முஜ்தலிபாவில் ஒன்பது தொடர்வண்டி நிருத்துமிடங்களை கொண்டிருக்கும்.
ஆரம்பமாக 10 தொடர்வண்டிகளுடன் ஆரம்பிக்கும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு தொடர்வண்டிகளும் 12 பெட்டிகள், 250 பேர் செல்லக்கூடிய வசதிகளை கொண்டிருக்கும். 20 சதவீத மக்கள் உட்கார்ந்தும், 80 சதவீத மக்கள் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்த தொடர்வண்டி மூலம் ஹாஜிகளின் பயண நேரம் மிக மிக குறைவாகி பயண நேர கஷ்டங்களும் நீங்கி விடும். இந்த தொடர்வண்டி அரபாவில் இருந்து முஜ்தலிபாவிற்கு செல்ல 5 நிமிடங்களும், முஜ்தலிபாவிலிருந்து மினாவிற்கு 5 நிமிடங்களில் சென்றடையும். இத்தொடர்வண்டி 80லிருந்து 120 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
இத்தொடர்வண்டியின் சோதனை ஓட்டம் இம்மாதம் ஆரம்பமாகி விட்டது. ஒரு மாதத்தில் 6000 கிமீ சோதனை ஓட்டம் ஓடிய பின் பயணிகளின் உபயோகத்திற்காக அனுமதிக்கப்படும்.
இத்தொடர் வண்டி திட்டத்தின் மூலம் இவ்வருட (ஹிஜ்ரி 1431) ஹாஜிகளே பயனைடயலாம். இத்திட்டதின் இரண்டாம் பாகம் மினாவில் இருந்து மக்காவிற்கும் பின் மதினா, ஜித்தா போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்பது ஹாஜிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.
No comments:
Post a Comment